Teach For Poor
Building Brighter Futures with Education
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.



ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு தலைமுறையில் பெரும் கல்வி அறிவானது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று கல்வியின் அவசியத்தை தீர்க்கமாக வலியுறுத்துகிறார் அய்யன் திருவள்ளுவர்.
அதுமட்டுமல்ல இன்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பலர் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை பற்றி பல்வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள்.
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்வி இன்று ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
கற்றலும் கற்பித்தலும் நன்று!
எங்களின் நோக்கம், பொதுவாக வறுமையில் இருக்கும் குழந்தைகள்தான் பெரும்பாலும் பள்ளி செல்வதில்லை, நலியுற்ற குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள், கொத்தடிமை குழந்தைகள் போன்றோரைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்துகொடுத்து அரசு உதவியுடன் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான பள்ளிக் கல்வி, உணவு, உடை, மருத்துவம், திறன்மேம்பாடு, உயர்கல்வி, தொழிற்கல்வி வழங்கிவருகிறோம்.
கிராமத்திலுள்ள 10ஆம் வகுப்பு மற்றும் +2ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்கள் உயர்கல்வி, தொழிற்கல்வி படிக்க அதாவது பா- லிடெக்னிக், பொறியியல், மருத்துவம், துணைமருத்துவம், விவசாயம், பார்மசி, நர்சிங் போன்ற தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளை கல்லூரி மற்றும் பல்கலைகழங்களில் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.

கல்வி ஒரு வளம்; அதை பெறுவது
ஒவ்வொரு குழந்தைக்கு வரம்
- நிபந்தனைகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கல்வித் தகுதிவைத்த ஊக்க வைப்புகள் வழங்கப்படும்.
- திறமையான மற்றும் பொருளாதாரத்தின் கீழுள்ள மாணவர்களுக்கு, மொத்த அல்லது பகுதி ஊக்க தொகைகள் வழங்கப்படும்.
ஒரு நல்ல கல்வி,
நல்ல வாழ்வின் அடிப்படையாகும்.
மருத்துவம், நர்சிங், பார்மசி, வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், சட்டம், கலை, அறிவியல், மேலாண்மை போன்ற துறைகளில் 3 ஆண்டு இளநிலை / 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு, குறைந்த கட்டணத்தில் முழுநேரமாக படித்து, IAS மற்றும் TNPSC தேர்வுக்கான சிறப்பு பயிற்சியுடன் அரசு வேலைவாய்ப்பில் சேர வாய்ப்பு.
விளிம்பு நிலையில் உள்ள ஏழை மாணவர்கள் TEACH FOR POOR கல்வி அமைப்பு மூலம் கல்வி உதவித் தொகை பெற்று படிக்கலாம்.
IIT-JEE, NEET இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.



