About Us

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.

எங்களின் நோக்கம், பொதுவாக வறுமையில் இருக்கும் குழந்தைகள்தான் பெரும்பாலும் பள்ளி செல்வதில்லை, நலியுற்ற குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள், கொத்தடிமை குழந்தைகள் போன்றோரைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்துகொடுத்து அரசு உதவியுடன் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான பள்ளிக் கல்வி, உணவு, உடை, மருத்துவம், திறன்மேம்பாடு, உயர்கல்வி, தொழிற்கல்வி வழங்கிவருகிறோம்.
கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுகின்ற அமைப்பு
நாளைக்கான ஒரு ஆயிரம் தலைவர்களை உருவாக்குங்கள்.
ஏழைகளுக்கு கற்பிப்பவராக இருங்கள்.
தமிழ்நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய கல்லூரி பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்கள் இந்த இயக்கத்தில் சேருங்கள்.
விளிம்பு நிலை சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு கல்வியாய் இருக்குமெனில் முகம் அறியாத ஒரு குழந்தைக்கு உதவி செய்யுங்கள்.
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும்போது உங்கள் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.